Friday, January 11, 2013

அதிவேகமாக Download செய்ய சிறந்த மென்பொருள்


நம்முடைய இணைய இனைப்பு வேகம் உடையதாக இருந்தாலும் நாம் Mp3,Video,Game,software…இப்படி ஏதாவது ஒன்றை Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும். இதற்கு காரணம் என்ன வென்றால் நாம் கணினியில் நிறுவியுள்ள Browser ( Firefox , opera , IE ) இல் கூடவே வரும் download manager ஐ பயன்படுத்தி வருவதுதான். download செய்வதற்காகவே என்றே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருளை பற்றி இன்று பார்ப்போம்.

Internet download manager (IDM) இந்த மென்பொருள் download செய்யும் போது ஒரு file ஐ உடைத்து (அளவை) பின்னர் அதனை ஒன்று சேர்க்கின்றது இதனால் நாம் முன்னர் download செய்ததைவிட வேகமாக download செய்வதை நீங்களே அவதானிப்பீர்கள்.இதில் வேறு என்ன வசதிகள் இருக்கு என்று பார்ப்போம்.

01.நாம் Download செய்து கொண்டிருக்கும் போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் இந்த மென்பொருள் ஆரம்பத்தில் இருந்து Download செய்யாமல்,இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து Download செய்ய Resume என்ற வசதி இதில் உண்டு.

02.YouTube இல் உள்ள ஏதாவது ஒரு video வை play செய்தால் போதும் அந்த video வை இலகுவாக Download செய்யும் வசதியும் இதில் உண்டு.

03.நீங்கள் ஏதாவது ஒரு தளத்திற்கு செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் (Facebook) அந்த தளத்தில் ஒரு Audio அல்லது video Play ஆகினால் போதும் அதை நாம் உடனடியாக download செய்து கொள்ளவும் முடியும்.

04.ஒரு File ஐ உடனடியாக Download செய்ய வேண்டிய கட்டாயம் ஒன்றும் இதில் இல்லை அதாவது நமக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது download செய்து கொள்வதற்கு Download later என்ற வசதியும் இதில் உண்டு.

இன்னும் பல வசதிகளை கொண்ட இந்த IDM ஐ Download செய்ய


AUTORUN வைரசை அகற்ற எளிய வழி!



கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது. இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது. இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால்  முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.
       
முதலில் உங்கள் கணினியில் NOTEPAD ஐ திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த CODE  ஐ அப்படியே COPY செய்து NOTEPAD ல் PASTE செய்யுங்கள்.

cd\
c:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
d:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
e:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
f:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
g:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
h:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
i:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
j:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
k:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
l:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
m:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
n:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
o:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
p:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
q:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
r:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
s:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf  


இந்த DOCUMENT ஐ ஏதாவது ஒரு பெயரில் .bat என்று முடியும் வகையில் சேமியுங்கள் .(உதாரணம் filename.bat) இப்போது நீங்கள் சேமித்த அந்த கோப்பை RUN செய்யுங்கள். இப்போது உங்கள் கணினியில் இருந்து autorun.inf  வைரஸ் நீக்கப்பட்டிருக்கும்.




Animation வாழ்த்து அட்டைகளை உருவாக்குவதற்கு...!




வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஓன்லைன் மூலம் நமக்கு தேவையான வடிவில் இருந்து எளிதாக உருவாக்கி அனுப்பலாம். நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது.


அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஓன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம். 


இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிக்கலாம்.


வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள், அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. விரும்பிய படங்களையும் அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.


இணையதள முகவரி :   Easyhi.com



FACE BOOK வைத்திருப்போருக்கு மிகவும் பெறுமதியான மென்பொருள்!

Face Book இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும்போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன. இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப் படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.

ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது. இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொண்டால் போதும். கீழே உள்ளது போன்று இனிமேல் படங்களை பெரிதாக்கிப் பார்க்கலாம்.




இதற்கான கூகிள் குறோமின் நீட்சியைப் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.




FireFox நீட்சியைப் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.








AutoSensitivity கணினியில் மவுஸின் தொடுதிறனை (Sensitivity ) கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது இந்த மென்பொருள். Touchpad உள்ள டிவைஸ்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். கணினியில் இந்த டூலை நிறுவுவதற்கு .NET Framework 3.5 or 4.0. தேவையாகும்.

டவுண்லோட் இணைப்பு: AutoSensitivity

கணனி வேகமாக start செய்ய ...!


நம்ம கணனி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணனி வேகமா Boot ஆகும்.
வழிமுறைகள்


1. நோட்பேட் (Notepad) திறந்து, “del c:\windows\prefetch\ntosboot-*.* /q” (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் “ntosboot.bat” – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.

2. Start menu போய், “Run…” செலக்ட் பண்ணுங்க, “gpedit.msc”-னு தட்டச்சு செய்யுங்க.

3. இப்ப “Computer Configuration” – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள “Windows Settings” டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, “Shutdown” – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.

4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் “add”, “Browse”-ல போய், முன்ன சேவ் பண்ணFile, ஓப்பன் பண்ணுங்க.

5. கிளிக் “OK”“Apply” & “OK”,

6. திரும்பவும் “Run…” வந்து, “devmgmt.msc” தட்டச்சு செய்யுங்க.

7. டபுள் கிளிக் “IDE ATA/ATAPI controllers”.

8. “Primary IDE Channel” – ல, Right click பண்ணி, “Properties” செலக்ட் பண்ணுங்க.

9. “Advanced Settings” tab கிளிக் பண்ணி, ‘none’ கொடுங்க.

10. “Secondary IDE channel”Right click பண்ணி “Properties” போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி “OK”கொடுங்க.

11. கடைசியா உங்க கணனிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க.

System Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்கு...!

கணணியைப் பாதிக்கும் பல வைரஸ்கள் புதிது புதிதாக வந்து கொண்டே உள்ளன. நமது கணணியைப் பாதுகாப்பாக வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.

சிலர் ஆண்டிவைரஸ் மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் சிலர் இலவசமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கணணியில் நல்ல ஆண்டிவைரஸ் போட்டிருப்பினும் சில நேரங்களில் மால்வேர்கள் போன்ற வகையிலான வைரஸ்களை கோட்டை விட்டு விடுகின்றன.


இதனால் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற நச்சுநிரல்களுக்கு எதிராகத் திறமையாக செயல்படுகிற கூடுதலான மென்பொருள்களைப் பயன்படுத்துவது கணணிக்குப் பாதுகாப்பாக இருக்கும்.


விண்டோஸ் இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது மால்வேர் தொல்லைகளைத் தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் System Sweeper.


இதன் மூலம் மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணணியில் இணைய இணைப்பில்லாத நேரத்திலும் சோதனை செய்து மால்வேர்களை அழிக்கலாம். இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.


இதன் மூலம் உங்கள் கணணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இதனைத் தரவிறக்கி கணணியில் நிறுவிப் பயன்படுத்துமாறு வழிசெய்யவில்லை. சீடி/டிவிடி அல்லது பென் டிரைவில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். தரவிறக்கம் செய்யும் போது சீடியிலோ அல்லது பென் டிரைவிலோ என்று தேர்வு செய்தால் அதில் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் அந்த சீடியை கணணியில் போட்டு கணணியைச் சோதிக்கலாம்.


பின்னாளில் கணணி வைரஸ் பிரச்சினை காரணமாக பூட் ஆகவில்லை என்றால் நீங்கள் இந்த மென்பொருளைப் பதிந்துள்ள சீடியைப் போட்டு பூட் செய்து கொள்ள முடியும்.


உடனே கணணியில் என்னென்ன மால்வேர் வைரஸ் உள்ளனவோ அவற்றைக் கண்டறிந்து அழித்து விடும். இந்த மென்பொருள் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு நிகரானது அல்ல.


கணணியின் பாதுகாப்புக்கு கூடுதலாக வைத்துக் கொள்ளலாம். எதாவது வைரஸ் பிரச்சினை காரணமாக கணணி இயங்கவில்லை என்றால் அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.


Download செய்ய இங்கே click செய்க
connect.microsoft.com

உங்கள் கணனி Password மறந்து போனால்...?




விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?


அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.


முதலில் கணனியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணனியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணனி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.


இந்த செயற்பாட்டில் கணனியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவுசெய்யவும்.



அடுத்து கணனி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.



ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.



மாற்றங்கள் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடரவேண்டும்.

அவசியமான 59 Software ஒரே க்ளிக்கில் Download செய்ய..!





நாம் புதிதாக கணனி வாங்கினாலோ அல்லது எமது கணனியை (Fomat) செய்து மீண்டும் புதுப்பித்தாலோ (install) நாம் கணனிக்கு தேவையான அனைத்து அப்ளிகேசன்களையும் (Applications),

சாப்வெயார்களையும் (Softwares),ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்யவேண்டி ஏற்படுகிறது. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க உதவுகிறது ஒரு அருமையான தளம்.


எமக்கு அவசியமான 59 அப்ளிசேன்களை முற்றிலும் இலவசமாக ஒரே கிளிக்கில் டவுண்லோட் செய்ய முடியும் இந்த தளத்தில்.  பயன்படுத்துபவர்கள் குறித்த தளத்திற்கு சென்று தேவையானதை க்ளிக் செய்து விட்டு GET INSTALLER என்பதை கிளிக் செய்யவும்.


குறிப்பிட்ட தளம் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
 Ninite.comhttp://ninite.com/